திங்கள், 26 ஜூலை, 2010

ஒவ்வொரு இந்தியர் மீதும் சராசரி கடன் பாக்கி ரூ.11,145




 இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.12.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் பாக்கி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகம். இது 2009 மார்ச் மாத நிலவரம். அதன் பிறகு மேலும் அதிகரித்திருக்கலாம்.இதை ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2008 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2008&09 நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.10.53 லட்சம் கோடியாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் ரூ.12.26

லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 16.5 சதவீத அதிகரிப்பு.

இந்தியாவின் வெளிநாட்டு மொத்த கடன் தொகையில் நீண்ட கால கடன்
தொகை ரூ.9.87 லட்சம் கோடி. குறுகிய கால கடன் தொகை ரூ.2.39 லட்சம் கோடி. 2008ம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் குறுகிய கால கடன் தொகை ரூ.42,770 கோடி அதிகரித்தது. நீண்ட கால கடன் ரூ.2.03 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு மொத்த கடன் தொகையில் நீண்ட கால கடன் தொகை ரூ.9.87 லட்சம் கோடி. குறுகிய கால கடன் தொகை ரூ.2.39 லட்சம் கோடி. 2008ம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் குறுகிய கால கடன் தொகை ரூ.42,770 கோடி அதிகரித்தது. நீண்ட கால கடன் ரூ.2.03 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
மொத்த வெளிநாட்டு கடனில் அரசின் பங்கு 2008ல் 24.4 சதவீதமாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் 25.7 சதவீதமாக உயர்ந்தது. மாறாக, அரசு சாராத கடன் தொகை 75.6 சதவீதத்தில் இருந்து 74.3 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் குறுகிய கால கடன் 41.2 சதவீதம். நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்தும் வர்த்தக நோக்கில் வெளிநாடுகளிடம் இருந்தும் அதிக அளவில் கடன் பெறப்படுகிறது.
இதனால் ஆண்டு தோறும் நாட்டின் கடன் சுமை வேகமாக உயர்ந்து வருகிறது. நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 110 கோடி என்று வைத்துக் கொண்டால் நிலுவையில் உள்ள கடன்களால் ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் சுமை உள்ளது

 

ரேஷன் கடையில் ஸ்டாக் இருக்கா? எஸ்எம்எஸ் அனுப்பினால் தெரியும்

ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வைத்து கொண்டே ‘ஸ்டாக் இல்லை’ என்று இனிமேல் சொல்ல முடியாது. எஸ்எம்எஸ் மூலமே நீங்கள் எவ்வளவு ஸ்டாக் உள்ளது என கண்டுபிடித்து விடலாம். ரேஷன் கடை செயல்பாடுகள் ஒளிவுமறைவின்றி இருப்பதை உறுதி செய்வதற்கு, இந்த வசதி ஓராண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ரேஷன் கடையில் என்னென்ன பொருள் எவ்வளவு இருப்பு உள்ளது என்று அறிய நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதுதான். முதலில் PDS என டைப் செய்து இடைவெளி விட்டு, மாவட்ட குறியீட்டு எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் பகுதி ரேஷன் கடை எண்ணை டைப் செய்து 9789006492 மற்றும் 9789005450 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனடியாக இருப்பு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் வந்து விடும். 




மாவட்ட குறியீட்டு எண், ரேஷன் கடை எண் ஆகியவை ரேஷன் கார்டிலேயே இருக்கிறது. கார்டில் மேல்பகுதியில் 11 இலக்கம் கொண்ட எண் உள்ளது. இதில் ஆங்கில எழுத்துக்கு முன்புள்ள 2 எண்கள் மாவட்ட குறியீட்டு எண். கடை எண் ரேஷன் கார்டின் கீழ்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .

இந்த கல்வி தொகை நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.



1 - 10 வகுப்பு வரை

தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
ஒரு குடும்பத்தில் பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல் நகல் (xerox)
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் : 
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
புதுப்பிக்கும் மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்
11, 12 , ITI, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பட்ட படிப்பு பட்ட மேற்படிப்பு ,ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000வரை
* 30% 
கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல்
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox)இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்
தொழிற்படிப்புகள் ( Engineering )

தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (
சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல்
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox)இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26கூடுதல் தகவல்கள் :
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm